கண்டியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அபாய பகுதிகளில் வசிப்பதாக தகவல்
Kandy
Climate Change
Weather
By Laksi
கண்டி மாவட்டத்தில் 1386 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயமானது தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1845 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாற்று குடியிருப்பு
இந்தநிலையில், 19 பிரதேச செயலகப் பிரிவுகளில் 231 குடும்பங்கள் மாத்திரமே கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, 235 குடும்பங்கள் மாற்று குடியிருப்புக்கு விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |