இணையவழி பண மோசடி : பல வெளிநாட்டு பிரஜைகள் கைது

Puttalam Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime
By Laksi Oct 16, 2024 06:06 AM GMT
Laksi

Laksi

சிலாபம் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 10 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணவில வீதியில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

இணையவழி பண மோசடியில் சிலர்  ஈடுபடுவதாக புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 4 மலேசிய ஆண்கள், 3 எத்தியோப்பிய ஆண்கள் மற்றும் ஒரு பெண், கென்யா பெண்ணொருவர் மற்றும் ஒரு சீன ஆண் ஒருவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இணையவழி பண மோசடி : பல வெளிநாட்டு பிரஜைகள் கைது | 10 Foreign Nationals Arrested In Chilaw

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 20 கணனிகள், 3 இணைய ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் தொடர்பில் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் இல்லை: இம்ரான் மகரூப் பகிரங்கம்

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் இல்லை: இம்ரான் மகரூப் பகிரங்கம்

எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ள ரணில்

எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ள ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW