ஜிகா வைரஸ் நோய் பரவல் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Pregnancy India
By Mayuri Jul 04, 2024 02:37 AM GMT
Mayuri

Mayuri

ஏடிஸ் வகை நுளம்பு மூலம் பரவும் ஜிகா வைரஸ் நோய் பரவல் குறித்து அவதானமாக இருக்குமாறு இந்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவிப்பு

இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரல் பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜிகா வைரல் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

தலைவலி, தோல் வெடிப்பு, காய்ச்சல், மூட்டு வலி உள்ளிட்டவை ஜிகா வைரஸ் தொற்றுப் பாதிப்பின் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜிகா வைரஸ் நோய் பரவல் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை | Zika Virus That Affects Pregnant Women More

கர்ப்பிணிகளை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள கர்ப்பிணிப் பெண்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இந்திய சுகாதாரத்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தமிழகத்தில் இந்தநோய் வேகமாகப் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW