போர் நிறுத்த ஒப்பந்த திட்டத்தை வெளியிடவுள்ள ரஷ்ய ஜனாதிபதி

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Russia
By Aadhithya Jun 30, 2024 11:41 AM GMT
Aadhithya

Aadhithya

ரஷ்யாவுடனான (Russia) போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்த திட்டத்தை வெளியிடவுள்ளதாக உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய (29) தினம் இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "ரஷ்யாவுடன் நடந்து வரும் போரை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போரில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஒப்பந்த திட்டம்

எனவே, போர் நிறுத்தத்தை இனியும் தள்ளிப்போட முடியாது. ராட்சிய ரீதியில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. விரைவில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உக்ரைனின் போர் நிறுத்த ஒப்பந்த திட்டம் வெளியாகும்.

போர் நிறுத்த ஒப்பந்த திட்டத்தை வெளியிடவுள்ள ரஷ்ய ஜனாதிபதி | Zelensky Outlines New Peace Plan For Ukraine

நேட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆண்டு படையெடுத்தது. தற்போது உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது.

இருந்தாலும், ரஷ்யாவால் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 4 பிராந்தியங்களின் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினர் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி

அந்தப் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யாவும் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடர்ந்து போரிட்டு வருகின்றன. 2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் இந்தப் போரில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புடின் (Vladimir Putin) கடந்த மாதம் முன்வைத்தார்.

போர் நிறுத்த ஒப்பந்த திட்டத்தை வெளியிடவுள்ள ரஷ்ய ஜனாதிபதி | Zelensky Outlines New Peace Plan For Ukraine

அதில் தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களிலிருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேறுவது, நேட்டோவில் இணையும் முயற்சியை உக்ரைன் கைவிடுவது ஆகிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் போரை நிறுத்த ஒப்புக்கொள்ளப்படும்” என அவர்  தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்