கிண்ணியா ஜமியத்துல் உலமா சபையின் ஸகாத் உதவி நிகழ்ச்சித் திட்டம்
அகில இலங்கை ஜமியத்துல் உலமா கிண்ணியா கிளையின் 2025 ஆண்டிற்கான ஸகாத் நிதியிலிருந்து பயனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம் பெற்றது.
கிண்ணியா உலாமா சபையின் ஸகாத் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, அதன் தலைவர்அஷ்ஷேய்கு ஏ.ஆர்.நசார் தலைமையில், கிண்ணியா உலமா சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஸகாத் உதவி நிகழ்ச்சித் திட்டம்
இந்த வருடத்தில், கடந்த ஐந்து மாதங்களாக, ஸகாத் பிரிவினால் வசூலிக்கப்பட்ட, நிதியிலிருந்து 24 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளும் 2 பயனாளிகளுக்கு நோய் நிவாரண உதவியும், 5 பயனாளிகளுக்கு முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளும், 4 பயனாளிகளுக்கு பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளும் கையளிக்கப்பட்டிருப்பதாக, ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் தெரிவித்தார்.
இன்று கையளிக்கப்பட்ட, 4 முழுமையான வீடுகளுடன், மொத்தமாக கடந்த பத்து ஆண்டுகளில் 224 வீடுகள் ஸகாத் உதவியின் மூலம், நிர்மாணிக்கப்பட்டு இந்தப் பிரதேசத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.
வாழ்வாதார மற்றும் வைத்திய சேவைகளுக்கான நிதி உதவியினை உலமா சபை அங்கத்தவர்கள் வீடு வீடாக தேடிச் சென்று, இன்றைய தினம் வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில், ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்களோடு, தனவந்தர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








