விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

Eastern Province Sri Lankan Schools Education
By Laksi Oct 08, 2024 08:13 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி - 2024 இல், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளார்.

இதன்போது, தரம் 9ஐ சேர்ந்த இருமொழிக் கல்விப் பிரிவின் மாணவன் எம்.பி.சாஃபி, திறமை சித்தியைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இது குறித்து பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில், சாஃபியின் சிறப்பான சாதனையானது அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அறிவியலுக்கான ஆர்வம் ஆகியவற்றைக் காட்டுகிறது.

பாலின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பாலின் விலை தொடர்பில் வெளியான தகவல்

மாணவனுக்கு வாழ்த்துக்கள்

இந்த அபாரமான சாதனைக்காக அவரை பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துகிறோம்.மேலும் அவரது எதிர்கால முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.

விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாஹிரா கல்லூரி மாணவன் சாதனை | Zahira College Student Win In Olympiad Competition

இந்த வெற்றியை பெற அவருடன் இணைந்து பணியாற்றிய சகலருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர் தெரிவித்துள்ளார். 

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவி விலகல்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவி விலகல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGallery