உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களை சந்தித்த கிழக்கு ஆளுநர்
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தரப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் இன்று(15) முறைப்பாடு செய்தனர்.
பரீட்சைகள் திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவர்கள் அவ்வாறு பரீட்சைகள் எழுதியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீர்வை பெற்றுதர நடவடிக்கை
இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டவந்த மாணவர்கள், தமக்கு உரிய தீர்வை பெற்றுதர நடவடிக்கைகைள எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக மாணவர்களிடம் உறுதியளித்தார்.