யுக்திய சுற்றிவளைப்பில் 761 பேர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 17, 2024 10:32 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது 761 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில்753 ஆண்களும் 08 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்

இதனையடுத்து, சந்தேக நபர்களிடமிருந்து 420 கிராம் 375 மில்லி கிராம் ஹெரோயின், 330 கிராம் 925 மில்லி கிராம் ஐஸ், 152 போதை மாத்திரைகள் , 16,206 கஞ்சா செடிகள் மற்றும் 1,006 கிராம் 225 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பில் 761 பேர் கைது | Yukthiya Operation Sri Lanka

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 12 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 02 பேரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் : நான்காயிரத்தை கடந்த முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் : நான்காயிரத்தை கடந்த முறைப்பாடுகள்

அம்பாறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கருத்தரங்கு நிகழ்வு

அம்பாறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கருத்தரங்கு நிகழ்வு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW