தொடருந்துடன் மோதி இளைஞர் உயிரிழப்பு

Sri Lanka Police Trincomalee Accident
By Fathima Oct 14, 2023 12:13 PM GMT
Fathima

Fathima

திருகோணமலை - மட்கோ பகுதியில் தொடருந்துடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாலையூற்று பகுதியில் உள்ள தொடருந்து தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் தொடருந்துடன் மோதியதாக தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.