நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி
தங்காலை பிரதேசத்தில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தம்பதெனிய, கலபட கிராமத்தை சேர்ந்த எம். அ.விதுச சமக மல்லவ ஆராச்சி என்ற 18 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
உயிரிழந்த இளைஞன் நாரம்மல மயூரபாத தேசிய பாடசாலையின் தகவல் தொழிநுட்பப் பிரிவில் 13ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆவர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
இந்நிலையில் நேற்றையதினம் தங்காலை பிரதேசத்தில் உள்ள மதியகனே குளத்தில் குளிப்பதற்கு 05 நண்பர்களுடன் சென்றுள்ளார்.
இவ்வாறு நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருக்கும் சந்தர்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தர்பத்தில் அவரை காப்பாற்ற நண்பர்கள் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தையடுத்து உடனடியாக ஸ்தலத்திற்குச் சென்ற நாரம்மல பொலிஸ் நிலைய அதிகாரிகள், இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், அவருடன் வந்திருந்த நண்பர்கள் 04 பேர் அச்சத்தில் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் மற்றொரு இளைஞனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அருகிலுள்ள கிராம மக்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய இளைஞனை மீட்டு உடனடியாக தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும், எனினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன் உயிரிழந்திருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.