யாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபகரமாக உயிரிழப்பு
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
Accident
By Fathima
யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் வைத்து சுண்டல் வண்டிக்குரிய மின்குமிழைப் பொருத்தும் போதே அவருக்கு மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் மரண விசாரணை
இந்நிலையில், குறித்த இளைஞன் உடனடியாக மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய உ.உசாந்தன் என்ற இளைஞனே இவ்வாறு மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.
மரண விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.