திருகோணமலையில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது
திருகோணமலை(Trincomalee) - சீனக்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார். அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைதானவர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |