திருமண வைபவத்தில் கலந்து கொண்ட யுவதியின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்

Puttalam Wedding
By Fathima Oct 29, 2023 11:50 PM GMT
Fathima

Fathima

புத்தளத்தில் திருமண நிகழ்வில் இறைச்சி உட்பட பல வகையான உணவுகளை உட்கொண்ட ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உணவு உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருமண விருந்தில் உணவுக்காக கிடைத்த இறைச்சி வகையை சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

யுவதி மரணம்

இதன் காரணமாக அவர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி குலேந்திர பிரேமதாச மேற்கொண்டார்.

மரணம் தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.