மூன்று வாகனங்கள் மோதியதில் இளம் பெண் மரணம்
Sri Lanka
By Nafeel
அத்துருகிரிய கொழும்பு பிரதான வீதியின் போரே சந்தி பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் 23 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவ் இளம்பெண், கெப் மற்றும் காரில் மோதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.