கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் கொலை: பெண் உட்பட மூவர் கைது

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Madheeha_Naz Oct 28, 2023 07:25 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தரின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி இரவு கிளிநொச்சி - வட்டக்கச்சிப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொலிஸ் நடவடிக்கை

இந்த சம்பவத்துடன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார் பெண் உட்பட மூவரை நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் கொலை: பெண் உட்பட மூவர் கைது | Young Family Member Murdered In Kilinochchi

கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நவரத்தினம் மதுஷன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரைத் தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய சந்தேகநபர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.