யோஷிதவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(06.11.2025) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணை
அந்நிலையில், வழக்கு தொடர்பான பல ஆவணங்களை அரச தரப்பு, பிரதிவாதியிடம் ஒப்படைத்தது.

அத்துடன், முன்வைக்கப்பட்ட ஆவனங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
மேலும், யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரெஸ்ட் ஆகியோர் சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததன் மூலம், நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |