சர்வதேச ஈர நில தினத்தை முன்னிட்டு யாழில் களப்பயணம்

Jaffna Sri Lanka
By Fathima Jan 27, 2024 06:41 PM GMT
Fathima

Fathima

எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச ஈர நில தினத்தை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயண (ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்) நடவடிக்கை ஒன்று யாழில் முன்னெடுத்திருந்தனர்.

இந்த களப்பயணமானது இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் இன்று (27.01.2024) இடம்பெற்றிருந்தது.

களப்பயணம் 

இதன் போது செம்மணி பிரதேசத்தில் அமைந்துள்ள ஈரநிலப் பிரதேசத்தினுள் மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் ஈரநிலத்தில் வாழும் சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என்பவற்றை அவதானிக்க புலமை மிக்க வளவாளர்களால் வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு மாணவருக்கு ஈரநிலங்களின் முக்கியத்துவம், ஈரநிலங்கள் பாதுகாக்கப்படலில் ஒவ்வொரு தனி மனிதனதும் பங்களிப்பு என்பனவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவ் ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணத்தில் மாணவர்கள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வயது வேறுபாடின்றி மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியுள்ளனர்.