உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை! வெளியான காரணம்
Sri Lanka
By Fathima
சர்வதேச அளவிலான பலமான கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை 8 இடங்கள் முன்னேறியுள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்(Henley Passport Index) என்ற நிறுவனம் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் உலகின் பலமான மற்றும் சிறந்த கடவுச்சீட்டு தொடர்பான தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கை கடந்த ஆண்டை விட, 2023 ஆம் ஆண்டு எட்டு இடங்கள் முன்னேறி 95 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இலங்கையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி விசா இல்லாமல் அல்லது ஒன்-அரைவல் விசா முறை மூலம் 41 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும்.
இந்த அம்சங்களை அடிப்படையாக கொண்டு தரவரிசைப் பட்டியலில் இந்த ஆண்டு இலங்கை 8 இடங்கள் முன்னேறியுள்ளது.