தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்! இம்ரான் கான் கோரிக்கை
Pakistan
Imran Khan
Afghanistan
By Thahir
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு கல்வி உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். அவர்களை அங்கீகரிக்காதவரை பெண்களுக்கான கல்வி உரிமை, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சர்வதேச அமைப்புகளுக்குள் தலிபான்களை கொண்டு வந்தால் தான் கேள்வி எழுப்ப முடியும் என்று தெரிவித்துளார்.