2080ஆம் ஆண்டளவில் உலக சனத் தொகை ஆயிரம் கோடியை எட்டுமென தகவல்

United Nations World
By Mayuri Jul 12, 2024 09:56 AM GMT
Mayuri

Mayuri

2080ஆம் ஆண்டளவில் உலக சனத் தொகையானது 1030 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலக சனத் தொகை 820 கோடியாக பதிவாகியுள்ளது.

உச்சமடையும் சனத்தொகை

இது 2080ஆம் ஆண்டாகும் போது 1030 கோடியை எட்டும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2080ஆம் ஆண்டளவில் உலக சனத் தொகை ஆயிரம் கோடியை எட்டுமென தகவல் | World S Population

2080ஆம் ஆண்டில் உலக சனத் தொகை உச்சத்தை அடைந்து, அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 73.3 வயது வரை உயிர் வாழ்வார்கள் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW