உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலின் பயணம் ஆரம்பம்: பெயர் சூட்டிய மெஸ்ஸி

By Thulsi Jan 28, 2024 04:25 AM GMT
Thulsi

Thulsi

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல ‘ராயல் கரீபியன்’ கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணக் கப்பல் மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.

டைட்டானிக் கப்பலை விட ஐந்து மடங்கு பெரியதான இந்த கப்பலில் 7 நீச்சல் தடாகங்கள் உள்ளன.

கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி மற்றும் இண்டர் மியாமி அணியினர் மூலம் இந்த கப்பலுக்கு ‘ஐகான் ஆப் தி சீஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

தீங்கு விளைவிக்கும் மீத்தேன் வாயு 

உலகின் மிகப்பெரிய பயணிகள் சொகுசு கப்பலான 'ஐகான் ஆஃப் தி சீஸ்' தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலின் பயணம் ஆரம்பம்: பெயர் சூட்டிய மெஸ்ஸி | World Largest Luxury Cruise Ship

குறித்த கப்பல் புளோரிடாவின் மியாமியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், கரீபியன் தீவுகளை 7 நாட்களுக்கு சுற்றி தனது முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. 

ரோயல் கரீபியன் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் 365 மீட்டர் நீளமும், 20 தளங்களும் கொண்டதாகவும், அதிகபட்சமாக 7,600 பயணிகள் இதில் பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கப்பலில் சுற்றுலா பயணிகளுக்கான அதிநவீன தங்கும் அறைகள், 6 நீர்சறுக்கு விளையாட்டுகள், ஒரு பனிசறுக்கு மைதானம், 7 நீச்சல் குளங்கள், ஒரு திரையரங்கம், 40 நவீன உணவகங்கள், பார்கள் இடம்பெற்றுள்ளன.

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலின் பயணம் ஆரம்பம்: பெயர் சூட்டிய மெஸ்ஸி | World Largest Luxury Cruise Ship

 எவ்வாறாயினும், இந்த கப்பலின் மூலம் தீங்கு விளைவிக்கும் மீத்தேன் வாயு வெளியேம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.