இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கியின் உதவி!
இலங்கையின் டிஜிட்டல் பரிமாற்றத் திட்டத்திற்காக (Sri Lanka Digital Transformation project) 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி அங்கீகாரம் அளித்துள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல்
நாட்டின் டிஜிட்டல் துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பதோடு, நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை (Innovation) மேம்படுத்துதல், அரசாங்கத்தின் நிர்வாக நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், அரச சேவைகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றுதலை நோக்காக கொண்டு அந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்களுக்கான அரச சேவைகளை அவர்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் கூடியவாறும், மக்களின் தேவைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கக் கூடியவாறும் (Responsive) மாற்றியமைத்தல் போன்றவற்றை நோக்காக கொண்டு அந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கல் ஊடாகப் பலப்படுத்துவதற்கு இந்த நிதிப் பங்களிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.