இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள உலக வங்கி

World Bank Sri Lanka Government
By Fathima Dec 16, 2025 05:31 AM GMT
Fathima

Fathima

இலங்கைக்கு பல மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள்

நடைமுறை திட்டங்களிலிருந்து நிதியை மறுபயன்பாடு செய்வதன் மூலம் அவசரகால உதவியாக 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதாக உலக வங்கி நேற்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள உலக வங்கி | World Bank Allocated Million Dollars Sri Lanka

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பு, நீர், கல்வி, விவசாயம் மற்றும் இணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுக்கவும், மீட்புக்கு இது உதவும் என்று உலக வங்கி அறிக்கைப் ஒன்றில் தெரிவித்துள்ளது.