தேர்தல் குறித்து தலைமையகங்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம் ஒன்று இன்று(28) திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் G. W. M. ஹேமந்தகுமார தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் ஆணைக்குழு தலைவர் சமன்சிறி ரத்னநாயக்க மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கலாநிதி தினேஷ் கருண நாயக்க ஆகியோரால் பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
செயலமர்வு
மேலும், இந்தக் கூட்டத்தில், கந்தளாய் மற்றும் திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர்கள், திருகோணமலை மற்றும் பொலநறுவ உதவி தேர்தல் ஆணையாளர்கள், திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர், தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட உதவி ஆணையாளர், தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர், திருகோணமலை பிரதி பொது பரிசோதகர், திருகோணமலை சட்டப்பிரிவுக்கான பொது பரிசோதகர் ஆகியோர்களுடன் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





