அம்பாறையில் அனர்த்த முகாமைத்துவ தொடர்பான பயிற்சி பட்டறை (Photos)

Ampara Eastern Province
By Fathima Jul 14, 2023 06:39 PM GMT
Fathima

Fathima

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு ட்ரோன் (Drone) தொழிநுட்பத்தின் பிரயோகம் தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் பயிற்சியளித்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு தென் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரபீட கேட்போர் கூடத்தில் நேற்று (13.07.2023) இடம்பெற்றது.

இதன்போது அனர்த்த முகாமைத்துவத்தின் ஒவ்வொரு படிமுறைகளிலும் ட்ரோன் தொழிநுட்பத்தின் அவசியம் பற்றி தெளிவாக விளக்கியதோடு அனர்த்த ஆபத்துக்களை மாவட்டத்தில் குறைப்பதற்கான நடடிக்கையினை இத்தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் நுட்பங்கள் பயிற்சி பட்டறையில் வளவாளரால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமிஸ் அபூபக்கர்,தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ், புவியிற்துறை பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல்.பௌசுல் அமீர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களில் பணியாற்றுகின்ற அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery