வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்
வாழைச்சேனை - கோறளைப்பற்று தெற்கு(கிரான்) பிரதேச செயலக கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவில் "பிடியளவு கமநிலத்துக்கு" எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு வேலைத்திட்டம் இடம்பெற்றுள்ளது.
புணாணை மயிலந்தனை கமநல அமைப்புக்குட்பட்ட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வயல் மற்றும் மேட்டு நிலங்களில் பயிரிடுவதற்கான விழிப்புணர்வூட்டும் செயற்பாடாக இது நேற்று(18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விளம்பரப் பாதாதைகள்..
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் கோ.ஜெயக்காந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,
விழிப்புணர்வூட்டும் விளம்பரப் பாதாதைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பன நிலைய உத்தியோகத்தர்கள் மூலம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர், முகாமைத்துவ உதவியாளர்கள், கமநல அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |