வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு சாதகமான சட்ட ஏற்பாடுகள்

Parliament of Sri Lanka Eran Wickramaratne Manusha Nanayakkara
By Aadhithya Jul 13, 2024 03:28 AM GMT
Aadhithya

Aadhithya

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு சாதகமான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) நேற்று (12) நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போதுள்ள 13 சட்டங்களை ஒன்றிணைத்து தொகுக்கப்படும் புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றென அவர் குறி்ப்பிட்டுள்ளார்.

புதிய விதிகள்

புதிய சட்டத்தின் கீழுள்ள புதிய விதிகளின் படி கூடுதல் நேரங்களில் வேலை செய்பவர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை மற்றும் வாரத்தில் 45 மணி நேர வேலைநேரத்தை நான்கு நாட்களில் முடித்தால் மூன்று விடுமுறை நாட்களை வழங்குதல் ஆகியவை அடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு சாதகமான சட்ட ஏற்பாடுகள் | Work From To Be Legalized In New Labour Law

மேலும், வீட்டு வேலை செய்பவர்களும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வருவார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW