வீட்டிலிருந்து கொண்டு ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்! இலக்கு வைக்கப்படும் பெண்கள்

Sri Lankan Peoples Crime Women
By Rakshana MA Aug 21, 2025 04:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

வீட்டிலிருந்து கொண்டு ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என இலக்கு வைக்கப்படும் பெண்கள் தொடர்பிலான மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மோசடி நடவடிக்கைகளில் வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்பும் பெண்கள், தாய்மார்கள், தங்களுடைய ஓய்வு நேரங்களில் பணம் சம்பாதிக்க விரும்புவோர் ஆகியோர் இலக்காகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொடுக்கப்படும் வேலையில், கவர்ச்சிகரமான சம்பளத் தொகை மற்றும் இரண்டு - மூன்று மணித்தியாலங்கள் உழைத்தாலே போதும் என்று விளம்பரப்படுத்தப்படுகின்றது.

வீழ்ச்சியடையும் நெல்லின் விலை! வெளியான தகவல்

வீழ்ச்சியடையும் நெல்லின் விலை! வெளியான தகவல்

இலக்கு வைக்கப்படும் பெண்கள் 

அதேவேளை, குறித்த விளம்பரங்களுக்கு இலங்கையில் இருக்கக் கூடிய மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் மையங்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வீட்டிலிருந்து கொண்டு ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்! இலக்கு வைக்கப்படும் பெண்கள் | Work From Home Scam Alert Sl

எனவே, பிரபல நிறுவனங்களின் பெயர்களையும், கவர்ச்சிகரமான சம்பள விபரங்களையும் பார்த்து ஏமாற்றம் அடையும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.

அவ்வாறு இவ்வகையான வேலைகளுக்கு விண்ணப்பிக்க முயற்சித்தால், அந்த இணைப்பு வேறொரு தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

அதில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் கோரப்படலாம். குறித்த வேலையைப் பெற பணத்தொகையை வைப்பிலிடுமாறும் கோரப்படலாம்.

எனவே இவ்வாறான போலியான விளம்பரங்களை நம்பி உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையோ அல்லது பணத்தையோ முதலீடு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றது.   

சம்மாந்துறை சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி

சம்மாந்துறை சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி

டிஜிட்டல் தளம் மூலம் விவசாயிகளுக்கு உர மானியம்

டிஜிட்டல் தளம் மூலம் விவசாயிகளுக்கு உர மானியம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW