தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணி பொறுப்பாளர் கைது (Photos)
Jaffna
Tamil National People's Front
Northern Province of Sri Lanka
By Erimalai
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சற்குண தேவி மருதங்கேணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (05.06.2023) அவரது வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர்.
வீட்டார் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை
இவ்வாறு கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றிச் சென்று தற்போது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் ஏதும் வீட்டார் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |