சாய்ந்தமருது பெண்கள் சந்தை பகுதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Ampara Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Dec 25, 2025 11:39 AM GMT
Fathima

Fathima

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெண்கள் சந்தை பகுதியையும் மையவாடியையும் சுற்றியுள்ள வீதியோரங்களில் கொங்கிறீட் இட்டு செப்பணிட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெண்கள் சந்தைப் பகுதியின் வீதியோரங்களிலும், அதனை ஒட்டிய மையவாடி வீதியோரங்களிலும் மண் நிறைந்து காணப்படுவதால், மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்பதுடன் சேறும் சகதியுமாக காணப்படுவதால் சந்தை வியாபாரிகளும் பொதுமக்களும் பல கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கோரிக்கை

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, குறித்த வீதியோரங்களில் கொங்கிறீட் இட்டு செப்பணிட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மையவாடி வீதியோரத்தில் வாகனங்கள் ஒழுங்காக நிறுத்துவதற்காக வெள்ளைக் கோடு அடையாளங்களை இட்டுத் தரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பெண்கள் சந்தை பகுதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Women S Market Area Sainthamarut

இக்கோரிக்கையை ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் செயலாளர் யூ.கே. காலிதீன் மற்றும் அந்த அமைப்பின் சூறா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.எல். எம் ரஃபி ஆகியோர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியியலாளரும் பதில் மாகாண பிரதிப் பணிப்பாளருமான பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் அவர்களை அவரது காரியாலயத்தில் நேரில் சந்தித்து முன்வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நிறைவேற்று பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், குறித்த பெண்கள் சந்தைப் பகுதியின் வீதியோரங்களை விரைவில் செப்பணிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்துள்ளார்.