இலங்கை தொடருந்து திணைக்களத்தின் முக்கிய பதவிகளை பெண்கள் வகிக்க அனுமதி
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் பாரம்பரியமாக ஆண்களுக்கு மட்டுமே இருந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பதவி
சட்டமா அதிபர் இதனை இன்று (12) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதுவரை, ஓட்டுநர், நிலைய அதிபர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி போன்ற சில முக்கிய பதவிகளை பெண்கள் வகிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ,இலங்கை தொடருந்து திணைக்களத்தின் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுக்கும் வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து இரு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரின் சார்பில் முன்னிலையான அரசு வழக்கறிஞர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த தீர்ப்பு இலங்கை தொழில் சந்தையில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதில் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. இது பொதுத்துறையில் மிகவும் முக்கியமானது.