கை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு
By Thulsi
வவுனியாவில் கை கால்கள் வெட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா - தரணிக்குளம் குறிசுட்டகுளம் பகுதியிலிருந்து நேற்று (14.11.2023) மாலை சடலம் .குளத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழுகிய நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம் குறித்த பகுதி மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சடலமானது இரண்டு கைகளும் ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.