ATM இயந்திரங்களுக்கு அருகில் குழந்தையுடன் சிக்கிய பெண்

Sri Lanka Police Sri Lankan Peoples Drugs
By Thahir Oct 01, 2023 11:00 AM GMT
Thahir

Thahir

பல நகரங்களில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த ATMகளில் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்கும் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஹொரணை பொலிஸார் ATM இயந்திரங்களுக்கு அருகில் யாசகம் பெற்று அந்த பணத்தில் இருந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை கைது செய்துள்ளனர்.

25 வயதுடைய அந்த பெண் பொல்கசோவிட்ட பாலமகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்படும் போது அவருடன் 8 மாத ஆண் குழந்தையும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ATM இயந்திரங்களுக்கு அருகில் குழந்தையுடன் சிக்கிய பெண் | Woman Who Was Begging Near Atm Machines

போதைப்பொருள் பழக்கம்

பத்து மாதங்களுக்கு முன்னர் பொல்கசோவிட்ட பகுதியில் உள்ள அழகு நிலையமொன்றில் பணிபுரிந்த மாயா, அங்கு பணிபுரிந்த காலத்தில் அழகு நிலையம் வைத்திருக்கும் பெண்ணுடன் போதைப்பொருள் குடித்து பழகியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் யாசகம் பெற்று 2500 ரூபாய் மட்டுமே சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த பணத்தில் தான் ஒரு நாளைக்கு இரண்டு முறை போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், போதைப்பொருளுக்கு 600 ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனால் ஒரு நாளைக்கு 1200 ரூபாய் போதைப்பொருளுக்கு மட்டுமே செலவிடுவதாகவும் கூறியுள்ளார்.

தனது நண்பர்கள் 5 பேர் கொண்ட குழு ATM இயந்திரங்களைச் சுற்றி யாசகத்தில் ஈடுபட்டதாக அவர் கூறியிருந்தார். மேலும் தனக்கு குழந்தை பிறக்க இருந்த நிலையில் கணவர் தன்னை கைவிட்டு சென்றுவிட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் நேற்று ஹொரணை பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ATM இயந்திரங்களுக்கு அருகில் குழந்தையுடன் சிக்கிய பெண் | Woman Who Was Begging Near Atm Machines