டுபாயிலிருந்து இலங்கை வருகை தந்த பெண்ணொருவர் கைது!

Bandaranaike International Airport Sri Lanka Police Investigation Sri Lanka Customs
By Fathima Dec 19, 2025 07:28 AM GMT
Fathima

Fathima

நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், டுபாயிலிருந்து ஃப்ளை டுபாய் FZ-569 விமானத்தில்,  இன்று (19) அதிகாலை 12.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்துள்ளார்.

மேலதிக விசாரணை

இதனையடுத்து "கிரீன் சேனல்" வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து இலங்கை வருகை தந்த பெண்ணொருவர் கைது! | Woman Was Arrested Katunayake Airport

இதன்போது இவரிடமிருந்து சுமார் 354,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.