காராத்தே போட்டியில் சாதனை படைத்த பல்கலைக்கழக மாணவி
By Rakshana MA
சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் - 2025 இல் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச தற்காப்புக் கலை சங்க இலங்கை கிளை (International Martialarts Association-Srilanka Branch) யினால் நடத்தப்பட்ட 3வது திறந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்பானது நேற்று (25) பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
தற்காப்பு கலை
குறித்த போட்டியில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் (புவியியல் துறை விசேட) மூன்றாம் ஆண்டு மாணவியான எம்.எஃப். ஸைனப், பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், சீனியர் கட்டா பெண் நிலை முதலாம் பிரிவில் 1 ஆவது இடத்தையும், சீனியர் குமிட் பெண் பிரிவில் 2 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


