அமெரிக்காவில் வேலைவாய்ப்பு: தமிழர் பகுதியில் பண மோசடி செய்து சிக்கிய பெண்

Sri Lanka Sri Lankan Peoples United States of America
By Aadhithya Jul 09, 2024 06:35 AM GMT
Aadhithya

Aadhithya

அமெரிக்காவில் (America) வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு தனது சகோதரியின் ஊடாக வேலை வாங்கி தருவதாக கூறி வேலை வழங்கவில்லை என கம்பஹா பிரதேசவாசி ஒருவர் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் அண்மையில் முறைப்பாடு செய்துள்ளார்.

கைது நடவடிக்கை

சந்தேகநபரான பெண் மீது பணியகத்திற்கு 5 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, அதன்படி செயற்பட்ட விசாரணை அதிகாரிகள் அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு: தமிழர் பகுதியில் பண மோசடி செய்து சிக்கிய பெண் | Woman Cheated Money Claiming Get A Job In America

அத்துடன், முறைப்பாடுகளின் பிரகாரம், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு, குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு

இதேவேளை, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபரான பெண் நாட்டில் உள்ள ஒரு பிரபலமான காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு: தமிழர் பகுதியில் பண மோசடி செய்து சிக்கிய பெண் | Woman Cheated Money Claiming Get A Job In America

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் இந்த மாதம் 7 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.