திருகோணமலையில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் ஒருவர் கைது

Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation Eastern Province
By Aadhithya Jul 19, 2024 11:00 AM GMT

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (19) சம்பூர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணிடம் இருந்து பியர் 6 டின்களும் சாராயம் இரண்டு போத்தல்களும் கசிப்பு ஒரு போத்தலும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் சேனையூர் ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த 42 வயது பெண் எனவும் சம்பூர் பொலிஸார் கூறியுள்ளனர்.

சட்டவிரோத மதுபான விற்பனை

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் ஒருவர் கைது | Woman Arrested In Trincomalee With Illegal Liquor

கைது செய்யப்பட்ட பெண், நீண்ட காலமாக அப்பிரதேசத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக கிடைத்த தொடர்ச்சியான தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபானங்களையும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் இன்று (19) மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலைப்படுத்த  நடவடிக்கை எடுத்திருப்பதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW