ஏறாவூரில் பொலிஸாரின் கடமைக்கு தடையாக இருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது
மட்டக்களப்பு - ஏறாவூர் மீராங்கேணி பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்ட போது பொலிஸாரின் கடமையை முன்னெடுக்க விடாமல் தாக்குதல் மேற்கொண்டதாக கூறி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை
போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதியிலுள்ள வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.
அவ்வாறு முற்றுகையிடப்பட்ட வீட்டில் 11.23 கிராம் ஹரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையினை மேற்கொள்ளவிடாமல் தாக்குதலில் ஈடுபட்ட 36 வயதுடைய பெண் ஒருவர், 24 வயதுடைய இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்த மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |