போதைப்பொருளுடன் கைதான குடும்ப பெண்!

CID - Sri Lanka Police Trincomalee Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA Jul 10, 2025 11:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை -  கிண்ணியாவில் (Kinniya) போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது, நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பெண்ணிடம் இருந்து 12420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் கிண்ணியா - மகரூப் பிரதேசத்தை சேர்ந்த, 57 வயதான குடும்ப பெண் ஆவார்.

வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடு

வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடு

போதைப்பொருள் வியாபாரம்

கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற, இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுடன் கைதான குடும்ப பெண்! | Woman Arrest With Ice Drug In Kinniya

மேலதிக நடவடிக்கைகளுக்காக, சந்தேகநபரை இன்றையதினம் (10) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.    

சாராவின் மரணத்தில் மூன்றாவது டி.என்.ஏ சோதனை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

சாராவின் மரணத்தில் மூன்றாவது டி.என்.ஏ சோதனை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

செம்மணியில் கொடூரமாக புதைக்கப்பட்ட மக்கள்! அரசு நீதியாக செயற்படவில்லை

செம்மணியில் கொடூரமாக புதைக்கப்பட்ட மக்கள்! அரசு நீதியாக செயற்படவில்லை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW