விமல் வீரவன்சவை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு
Wimal Weerawansa
By Kamal
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்பு கிளைக்கு எதிரில் நடைபெற்ற போராட்டம் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அப்போதைய ஆணையாளர் சஹிட் அல் உசைன் இலங்கை விஜயம் செய்திருந்த போது இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.