கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்

Trincomalee Elephant Sri Lanka Elephants
By Fathima Dec 25, 2025 06:00 AM GMT
Fathima

Fathima

கந்தளாய் - பேரமடு பிரதேசத்தில் காட்டு யானை அப்பகுதியிலிருந்த கடையொன்றை தாக்கி உடைத்துள்ளது. 

குறித்த சம்பவம் இன்று (25) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

யானையின் தாக்குதலுக்கு உள்ளான கடையின் உரிமையாளரான, தனது கணவர் இல்லாத நிலையில் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

யானைகளின் அட்டகாசம்

இந்த நிலையில் பல பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில், தனது வாழ்வாதாரத்திற்காக சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு இந்தக் கடையை அவர் நடத்தி வந்துள்ளார்.

கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் | Wild Elephants Rampage Kandhalai Area

இவ்வாறான சூழலில் இன்று அதிகாலை திடீரென கடைக்குள் புகுந்த யானை, கடையின் சுவர்களை உடைத்து உள்ளே இருந்த பொருட்கள் மற்றும் தளபாடங்களைச் சேதப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் தொடர்ந்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.