திருகோணமலையில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

Trincomalee Elephant
By Kiyas Shafe Jan 17, 2026 01:28 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் இன்று (17.1.2026) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன.

இதன்போது 15 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் அழித்துள்ளது.

கோரிக்கை 

அத்தோடு வீடொன்று அங்கிருந்த உடமைகளை காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தோர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்! | Wild Elephants Attack In Trincomalee

தொடர்ச்சியாக தமது கிராமத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவது கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறும் பாதிக்கப்பட்ட தமக்கு நஷ்டஈட்டை பெற்றுத் தருமாறும் வெருகல் -உப்பூறல் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 