கருவள கஸ்வெவ பகுதியில் காட்டு யானை இறந்த நிலையில் மீட்பு.
Trincomalee
Sri Lanka
By Nafeel
கந்தளாய் வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவல கஸ்வெவ பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் இன்று (8) மீட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
குறித்த காட்டு யானை சூரியபுற பகுதியிலிருந்து நேற்று மாலை (07) கருவள கஸ்வெவ பகுதிக்கு குட்டியும் தாயும் வந்ததாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலையில் காட்டு யானை இறந்த நிலையை கண்ட பொதுமக்கள் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது .
குறித்த யானை தொடர்பாக தகவலறிந்த கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு யானையின் பத்து நாள் குட்டியையை தேடும் பணியேயை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
