புத்தளத்தில் கிணற்றில் இருந்து காட்டு யானையின் சடலம் மீட்பு

Puttalam Elephant Sri Lanka Elephants
By Laksi Dec 21, 2024 07:39 AM GMT
Laksi

Laksi

புத்தளம்(Puttalam) - வண்ணாத்திவில்லு இரணவில்லு பகுதியில் காட்டு யானை ஒன்று சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

உடற்கூற்று பரிசோதனை

இந்தநிலையில், குறித்த யானையானது கைவிடப்பட்ட விவசாய கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளத்தில் கிணற்றில் இருந்து காட்டு யானையின் சடலம் மீட்பு | Wild Elephant Carcass From Well In Puttalam

இவ்வாறு உயிரிழந்த யானை 30 வயது என மதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 அடி உயரம் கொண்டு காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யானைக்கு மிருக வைத்தியரினால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்க உள்ளதாக இதன்போது கூறப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW