புத்தளத்தில் வீடொன்றுக்குள் புகுந்த காட்டு யானை

Puttalam Sri Lankan Peoples Elephant
By Laksi Sep 07, 2024 03:33 AM GMT
Laksi

Laksi

புத்தளம் மாவட்டத்தின் மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த காட்டு யானையொன்று வீட்டை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது நேற்று (6) அதிகாலை கோம்பகஹவெவ கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாரிய சத்தத்துடன் வீட்டு வளவுக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டை உடைத்து வீட்டில் இருந்த நெல் மூடைகளை வெளியே எடுத்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

பகுதியளவில் சேதம்

இதனால் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளத்தில் வீடொன்றுக்குள் புகுந்த காட்டு யானை | Wild Elephant Breaks Into House In Puttalam

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு அயலவர்கள் வருகை தந்து காட்டு யானையை விரட்டியடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நாளுக்கான வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

மக்கள் கோரிக்கை

அத்தோடு,  மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், இரவானதும் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

புத்தளத்தில் வீடொன்றுக்குள் புகுந்த காட்டு யானை | Wild Elephant Breaks Into House In Puttalam

எனவே காட்டு யானைகளை இப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஞ்சல் மூல வாக்களிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

அஞ்சல் மூல வாக்களிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW