மட்டக்களப்பில் வீட்டை தாக்கிய காட்டுயானை: தெய்வாதீனமாக உயிர்தப்பிய குடும்பம்
மட்டக்களப்பு (Batticaloa) -வடமுனை பிரதேசத்தில் வீடு ஒன்றை காட்டுயானை தாக்கியதில் வீட்டின் ஒருபகுதி சுவர் இடிந்து வீழ்ந்ததையடுத்து கணவன், மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (2) இரவு எல்பி கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தபகுதியில் நேற்று இரவு 11 மணிக்கு ஊடுருவிய காட்டுயானை வீடு ஒன்றை தாக்கியதையடுத்து வீட்டின் ஒருபகுதி சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.
யானைகளின் அட்டகாசம்
இதனையடுத்து, வீட்டில் நித்திரையில் இருந்த கணவன், மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த வெள்ள அனர்தத்தினால் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் காட்டுயானை ஊருக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த கிராமத்தில் மீள்குடியேறியுள்ள சுமார் 400 குடும்பங்கள் யானைகளிடமிருந்து தமது உயிரை காப்பாற்ற தினம் தினம் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |