கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்
ஹமாஸ் அமைப்பின் கொல்லப்பட்ட தலைவர் யாஹ்யா சின்வரின் மனைவி காசாவில் இருந்து தப்பி துருக்கி சென்று, அங்கு மறுமணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, 2023 அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதிகளை ஒவ்வொருவராக இஸ்ரேல் கொன்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 16ல் ஹமாஸ் தலைவராக இருந்த யாஹ்யா சின்வர், துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் மீதான தாக்குதலில் இவர் மூளையாகச் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் கொல்லப்படுவதற்கு முன், அவரது மனைவி சமர் முகமது அபு ஸாமர், காசாவைச் சேர்ந்த வேறொரு பெண்ணின் கடவுச்சீட்டு மூலமாக, குழந்தைகளை அழைத்துக் கொண்டு துருக்கி சென்றது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேலின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
யாஹ்யா சின்வர் கொல்லப்படுவதற்கு முன், அவரது மனைவி தன் குழந்தைகளுடன் துருக்கி சென்று விட்டார். இதற்காக போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி உள்ளார்.
தேவையான உதவி அவருக்கு, ஹமாஸ் அரசியல் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி பதி அகமது தேவையான உதவிகளை செய்து தந்தார்.
இதே போன்று யாஹ்யா சின்வருக்கு பின் ஹமாஸ் தலைவராகி கொல்லப்பட்ட அவரது தம்பி முகமதுவின் மனைவி நஜ்வாவும் துருக்கி தப்பி சென்றுள்ளார். இதில், யாஹ்யா சின்வரின் மனைவி மறுமணம் செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.