இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணத்தை வெளியிட்ட பேராசிரியர்
இலங்கை வருடத்திற்கு 1 அல்லது 2 மில்லி மீட்டர்கள் என்ற விகிதத்தில் மிக மெதுவாக உயர்வடைவதே நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான காரணம் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நிலத்தடி செயற்பாடு
அனுராதபுரத்திற்கும் கந்தளாய் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (16) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறிள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''பூமியின் உட்பகுதியில் உள்ள விரிசல்களினால் ஏற்படும் சிறு அசைவுகளினால் ஏற்படும் அதிர்வுகளே நிலநடுக்கங்களுக்கு காரணம்.
இலங்கை வருடத்திற்கு 1 அல்லது 2 மில்லி மீட்டர்கள் என்ற விகிதத்தில் மிக மெதுவாக உயர்வடையும். இடத்துக்கு இடம் உயரும் அளவு மாறுபடும்.
அதிர்வுகள்
குறிப்பாக பூமியின் மேலோட்டத்தில் நிலத்தடி செயற்பாடு அதிகமாக இருக்கும் பல இடங்கள் உள்ளன.
இந்த பகுதிகள் கனிம வளங்கள் நிறைந்தவை.அவற்றில் உள்ள கனிம வளங்களின் அடிப்படையில் அந்த இடங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிது.எனவே, இந்த நில உயர்வால், இந்த சிறிய அதிர்வுகள் ஏற்படுகின்றன." என்று கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |