நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட கோதுமை
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, கரப்பான் பூச்சிகள் உள்ளிட்ட பூச்சிகள் நிறைந்த கோதுமை மாவை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட சோதனைப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கோதுமை
களனியின் பெத்தியகொட பகுதியில் உள்ள ஒரு தனியார் இறக்குமதி கிடங்கில் கரப்பான் பூச்சிகள் உட்பட பூச்சிகள் நிறைந்த 50 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான கோதுமை மாவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவு மீண்டும் பொட்டலம் கட்டி சந்தைக்கு வெளியிடுவதற்காக சேமித்து வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
கிடங்கிற்கு சீல் வைத்து மாவு இருப்பைக் கைப்பற்றிய நுகர்வோர் அதிகாரிகள், சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதாகக் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |