மட்டக்களப்பில் உரிமை கோரப்படாத மாடுகள்! பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Mar 26, 2025 03:28 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியின், தாண்டவன்வெளி வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் நேற்று(25) இரவு பிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.

இதனையடுத்து மாநகர சபை அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லாப்ஸ் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

லாப்ஸ் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

கட்டாக்காலி மாடுகள் 

இந்தநிலையில் செவ்வாய்கிழமை இரவு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக வீதிகளில் நின்ற 05 கால்நடைகள் மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் உரிமை கோரப்படாத மாடுகள்! பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை | Unclaimed Cows In Batticaloa For Auction

இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக அழைந்து திரிகின்றது. இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றது.

எனவே, கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தி தண்டப்பணத்தினையும் செலுத்த வேண்டும்.

10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் மலசலகூடத்தில் உணவு தயாரித்த உரிமையாளர் கைது

மட்டக்களப்பில் மலசலகூடத்தில் உணவு தயாரித்த உரிமையாளர் கைது

சவேந்திர சில்வா கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை

சவேந்திர சில்வா கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW